×

திருநள்ளாறு கோயில் கும்பாபிஷேக திருப்பணி, பாதுகாப்பு புதுச்சேரி டிஜிபி சுந்தரிநந்தா ஆய்வு

காரைக்கால், பிப்.2: திருநள்ளாறு ஸ்ரீ தர்பாராண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் திருப்பணி மற்றும் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்து சிறப்பாக உள்ளது என, புதுச்சேரி டிஜிபி சுந்தரிநந்தா தெரிவித்துள்ளார்.காரைக்கால் திருநள்ளாற்றில் வரலாற்று  தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சனி பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இதனால், இக்கோயிலில் சனி, ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு, 12 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் பிப்.11ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த 27ம் தேதி இதன் சார்பு கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
11ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, புதுச்சேரி  காவல்துறை டிஜிபி சுந்தரிநந்தா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன், கலெக்டரும், கோயில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா,  எஸ்.எஸ்.பி மகேஸ்குமார் பன்வால், எஸ்.பிக்கள் உடன் சென்றனர்.
 ஆய்வின் முடிவில், புதுச்சேரி டிஜிபி சுந்தரி நந்தா நிருபர்களிடம் கூறியது: வரும் பிப்.11ம் தேதி நடைபெறவுள்ள திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா சிறப்பு மிக்கது. கலெக்டர் விக்ராந்த்ராஜா, எஸ்.எஸ்.பி மகேஸ்குமார் பன்வால் மற்றும் பொறியாளர்கள் பிரிவு மிகவும் சிரமப்பட்டு கும்பாபிஷேக திருப்பணிகளை செய்துவருகின்றனர். திருப்பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் சிறப்பாக உள்ளது.
கும்பாபிஷேகத்திற்கு சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கலெக்டர் தலைமையில், பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனிதநீர் தெளிக்கவும், குடிநீர், வரிசை உள்ளிட்ட விரிவான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் கூட்டத்தில் இடையே புகுந்து நகை பறிப்பு, பிட்பாக்கெட் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதனை எஸ்எஸ்பி தலைமையில் போலீசார் எடுத்து வருகின்றனர். கோயிலைச்சுற்றி சிசிடிவி கேமரா செயல்பாட்டில் உள்ளது என்றார்.
  கலெக்டர் விக்ராந்த்ராஜா கூறுகையில், கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை  வசதிகளை செய்வதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக கும்பாபிஷேகம் அன்று கோயில் ராஜகோபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க விரிவான வசதிகளை செய்து வருகிறோம். மேலும் கும்பாபிஷேக விழாவையொட்டி, வருகிற 7ம் தேதி மாலை முதல் கால யாகச்சாலை பூஜைகள் தொடங்கி, 11ம் தேதி காலை வரை 8 கால யாகச்சாலை பூஜைகள் நடைபெறுகிறது. முக்கியமாக 9ம் தேதி(சனிக்கிழமை) கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பகவான் உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்ய இயலாது. யாகச்சாலைகளில் கலந்து கொள்ளலாம். அதனால், அன்றைய தினம் கோயிலுக்கு வருவதை தவிர்த்து 11ம் தேதி அனைவரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய வேண்டுகிறோம் என்றார்.
காரைக்கால் பேருந்து நிலையத்தில் 6 மாதமாக பூட்டியே கிடக்கும் சுத்திகரிப்பு குடிநீர் மையம் சீரமைத்துதர பயணிகள் வலியுறுத்தல் காரைக்கால், பிப்.2: திறக்கப்பட்ட 6 மாதத்தில் காட்சிப்பொருளான பேருந்து நிலைய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை, உடனே சீரமைத்துதரவேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.காரைக்கால் மாவட்ட பேருந்து நிலையத்தில், பெங்களூர், திருப்பதி, சென்னை, புதுச்சேரி, சிதம்பரம் தஞ்சாவூர், திருச்சி, உள்ளிட்ட தொலைதூர  வழித்தடங்களிலும், நாகூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கும் அதிகமான பயணிகள் தினசரி சென்றுவருகின்றனர்.பேருந்து நிலைய பயணிகளின் நீண்ட நாளையை கோரிக்கையை ஏற்று, ரோட்டரி கிளப் ஆப் சென்டேனியல் சங்கமானது, கடந்த ஏப்ரல் 2018 அன்று சுத்திகர்கரிக்கப்பட்ட குடிநீர் மையத்தையும், தாய்மார்கள் அமுதூட்டும் அறையையும் அமைத்து, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து, அப்போதைய கலெக்டர் கேசவானால் திறந்து வைக்கப்பட்டது.திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை மாவட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்கமால் விட்டதால், அடிக்கடி பழுதாகி கடந்த டிசம்பர் மாதம் முதல் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நின்று போனது. அதன் அருகில் சாதாரண நீர்க்கான குழாயும் உள்ளது. மேற்கண்ட இரு  குடிநீர் குழாய்களுக்கு மேலே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என பெயர்பலகை இருப்பதால் பலர் சாதாரண குழாயில் வரும் நீரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நினைத்துகுடித்து ஏமாந்து போகின்றனர். எனவே செயல்படாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை உடனே பழுதுபார்த்து, பயணிகளுக்கு 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் -கிடைக்க வழிவகை செய்யவேண்டும். வருவது கோடைக்காலம், என்பதால் இது மிக அவசியம் என்பதை மாவட்ட நிர்வாகம் கருத்திகொண்டு செயலப்டவேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Thirunallur ,Kumbabishek Thirunachai ,Defense Puducherry DGP Sundarinta ,
× RELATED விராலிமலை அருகே திருநல்லூரில் நடந்த...